189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் நடைபெறவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் , தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே. குமணனால் எடுக்கபட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே இவ்வாறு காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.
யாழில். தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
Spread the love