இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கனமழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது மழை குறைந்துள்ளது. என்றாலும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசியாவின் சுவாவேசித் தீவில் ஏற்பட்ட மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் பபுவாவில் பெய்த கனமழையில், 50 பேர் பலி…
191
Spread the love
previous post