Home இந்தியாஆமி மோடிக்கு பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை….

ஆமி மோடிக்கு பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை….

by admin

மும்பையில் உள்ள பஞ்சாப் நஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

நிரவ் மோடிக்கு எதிராக அமுலாக்கத் துறையினர் சமீபத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதுடன் நிரவ் மோடி மோசடி செய்த பணத்தில் அவரது மனைவி ஆமி மோடி நியூயோர்க்கில் உள்ள சென்டரல் பார்க் பகுதியில் சொத்து வாங்கி இருப்பதும் அமுலாக்கத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.

இதையடுத்து அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்க நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு எதிராக வெளிவர முடியாத கைது ஆணை உத்தரவினை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More