அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆபிரிக்க நாடுகளான மொசாம்பிக், சிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் தாக்கம் காரணமாக இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
அதேவேளை இந்த 3 நாடுகளையும் சேர்ந்த 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஐநா மற்றும் அரச உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மொஸாம்பிக்கின் பெய்ரா நகரில் விமானநிலையம் மூடப்பட்டுவிட்டதுடன் அங்கு மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் அழிவடைந்துள்ளமதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா அமைப்புகளும், செஞ்சிலுவை சங்கமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் ஹெலிகொப்டர் மூலம் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.