Home இலங்கைதலை மன்னார் பிரதான வீதியில் விபத்து – குடும்பஸ்தர் பலி- மனைவி படுகாயம் :

தலை மன்னார் பிரதான வீதியில் விபத்து – குடும்பஸ்தர் பலி- மனைவி படுகாயம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி,புதுக்குடியிறுப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மதியம் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு,அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் ஆண்டாங்குளம் ஆக்காட்டி வெளி கிராமத்தை வதிவிடமாகவும், மன்னார் சாந்திபுரம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என தெரிய வருகின்றது.

குறித்த குடும்பஸ்தர் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது , தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி பொருட்களுடன் பயணித்த வாகனம் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தரே இவ்வாறு சம்பவ இடத்தில் பலியானதோடு, அவரது மனைவி படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலையின் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More