இந்தியாவில் தற்போது 2293 கட்சிகள் உள்ள நிலையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் புதிதாக 149 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இப்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை பதிவு செய்த கட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் 2293 கட்சிகள் உள்ள நிலையில் தேசிய அளவில் 7 கட்சிகளும், மாநில அளவில் 59 கட்சிகளும் தேர்தல் ஆணையகத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதுடன் ஏனையவை உரிய அங்கீகாரம் பெறாதவையாகும்.
கடந்த பெப்ரவரி, மார்ச் மாதத்தில் மட்டுமே புதிதாக 149 கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது