197
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கேப் டௌணில் இன்று நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்த இலங்கை, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 0-5 என வெள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை அணியில் உலகக் கிண்ணத் தொடருக்கான அணி;க்கான அனைத்து இடங்களும் வெற்றிடமாகவே உள்ள நிலையில், அதில் இடம்பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான இருஇன்னொரு சந்தர்ப்பமாக இந்தத் தொடர் காணப்படுகின்றது.
Spread the love