இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் சில குள்ள மனிதர்கள், மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் குறித்த முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவாகியுள்ள பல முறைபாடுகள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்திய போதிலும், சம்பவம் தொடர்பில் எந்தவித ஆதாரங்களையும் காவல்துறையினரினால் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில், மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் காவல் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
மாத்தறை – தொட்டமுன பகுதியில் நேற்றிரவு சில குள்ள மனிதர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டி எனினும் சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்திய போதிலும், தமக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.