குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், தென்னை சார் கைப்பணி பொருட்களின் பயிற்சி நெறிகள் யாழில் நடைபெறவுள்ளன. நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியில் உள்ள ‘திவ்விய ஜீவன ‘ மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9. 30 மணியளவில் தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
தென்னை பயிர்செய்கை சபையானது குறைந்த வருமானத்தை ஈட்டும் பெண்களுக்கு , வீட்டில் இருந்தவாறே கைத்தொழில் செய்வதன் ஊடாக வருமானத்தை அதிகரிக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் விளக்குமாறு , துடைப்பம் , சிரட்டை அலங்காரம் , தென்னோலையிலான கைவேலைகள் என்பவற்றுக்கான பயிற்சி நெறிகளே வழங்கப்படவுள்ளன.
இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டு நல்லூர் பிரதேச கற்பகதரு சங்க பெண்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.