இத்தாலியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலைப் பேருந்தை சாரதியே கடத்திச் சென்று தீ வைத்ததில் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியின் மிலன் நகரில் 51 மாணவர்களுடன் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ள சாரதி எல்லாவற்றுக்கும் இன்று முடிவு கட்ட விரும்புகிறேன் எனவும் மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூ பேருந்தினுள் சிறிது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவர்கள் விரைந்து செயல்பட்டு பேருந்தை துரத்திச் சென்று மடக்கி பின்னர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த மாணவர்களை மீட்டுள்ளனர். மாணவர்களை மீட்ட சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட மாணவர்களில் 12 மாணவர்கள் மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளர்h.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செனகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட இத்தாலியர் எனவும் . மத்திய தரைக்கடல் பகுதியில் மரணம் அடைவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இத்தாலிய உள்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமரின் கடுமையான அகதிகள் விரோத கொள்கைகளை கண்டிக்கும் வகையிலும் பேருந்தை கடத்தி தீ வைத்ததாக அவர் தெரிவித்துள்ளர்h. அவர் மீது கடத்தல், கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.