காங்கேசன்துறை ‘தலசெவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்த ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலி.வடக்கு காங்கேசன்துறை “தலசெவன இராணுவ விடுதியை” மையமாகக் கொண்டு அவ் விடுதியைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவ நிர்வாகத்தினது சுற்றுலாப் பயன்பாட்டிற்காக எடுத்துள்ள சுவீகரிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சுடன் பேச்சு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.