ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புத்தளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புத்தளம் பேருந்து நிலையத்திற்கு முன்னால் சகல வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டுள்ள நிலையில் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் உள்ள பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் தாக்கியுள்ளதோடு, தேவை ஏற்படின் கண்ணீர்ப்பிரயோகம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.