தெலங்கானாவில் இரவும் பகலும் தொடர்ந்து பப்ஜி விளையாடியதால் நரம்பு பாதிக்கப்பட்டு 20 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பப்ஜி எனப்படும் இணைய விளையாட்டிற்கு இளைஞர்களும், மாணவர்களும் அடிமையாகி வருவது அதிகரித்து கொண்டே வருகின்ற நிலையில் குஜராத் மாநிலத்தில் சூரத், ராஜ்கோட் பகுதிகளில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தெலங்கானாவில் பப்ஜி விளையாட ஆரம்பித்துள்ள 20 வயதான இளைஞர் ஒருவர் நாளடைவில் அதற்கு அடிமையாகி இரவும், பகலும் தொடர்ந்து குனிந்தபடியே விளையாடியதனால கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தோடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் நரம்புகள் முழுவதும் பாதிப்படைந்ததால் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளர்h.
தற்போது அவரின் நண்பர்கள் பப்ஜி விளையாட்டின் அபாயம் குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது