175
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 தமிழக மீனவர்கள் நேற்று சனிக்கிழமை நெடுந்தீவுப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற குறத்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக தெரிவித்து கைது செய்த கடற்படையினர் அவர்களது இரண்டு விசைபடகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன்துறை கடற்படைமுகாமில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love