பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் மட்டுமின்றி விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் பிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.
ஐரோப்பாவின் தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா இதுவரை 4,000க்கும் மேலான கோள்கள் சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் நாசா 4,000 எனும் இலக்கை அடைய இன்னும் 74 கோள்களை ஆவணப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.