மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமை தொடர்பாக பெண் பயணி ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூர் எயர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக பயணிகள் விமானம் நேற்று மதியம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து263 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்திற்கு வந்த அழைப்பொன்றில் குறித்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக விமானம் இன்று காலை சிங்கப்பூர் விமானப்படையின் உதவியுடன் அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படட் போது விமானத்தில் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. இந்தநிலையில் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமை தொடர்பாக, குழந்தையுடன் வந்த பெண் பயணி ஒருவரிடம் காவல்முதுறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது