177
வவுனியாவில் சிறுவன் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளர்h. நேற்றரவு வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதிக்குள் நுழைந்த யானை துவிச்சக்கர வண்டியில் தனது வீடு நோக்கி சென்ற சிறுவனை தாக்கியதில் இவ்வாறு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார். யானை தாக்கியதில் படுகாயமடைந்திருந்த சிறுவன் உடனடியாக ஹெப்பற்றிகொலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love