இந்தியா பிரதான செய்திகள்

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா என்பது சந்தேகம்…


இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி தெரிவித்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் .

எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்திருந்த மத்திய அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் , நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தான் இந்த தகவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link