128
வெள்ளை தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை கொண்டாடும், ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் பதிவுகளை முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ரகிராம் ஆகிய இரண்டும் அடுத்தவாரம் முதல் தடை செய்யவுள்ளதாக முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு தடை செய்யும் திறனை மேம்படுத்தவுள்ளதாகவும அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று புண்படுத்தும் சொற்களை முகப்புத்தகத்தில் தேடினால் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக பணி புரியும் தொண்டு நிறுவனங்களின் பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love