உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் விவசாயிகளுக்குக் குறைந்த மானியமே வழங்கப்படுவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா தனது விவசாயிகளுக்கு விதிமுறைகளை மீறி அதிக மானியத் தொகையை வழங்குவதாக உலக வர்த்தக மன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் முறையிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு இந்தியா விளக்கமளித்துள்ளது.
உலக வர்த்தக மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 10 சதவிகித வரம்புக்கு உள்ளாகத்தான் மானியங்கள் வழங்கப்பட்டு வருவதாக இந்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 250 டொலர் வரையில் மட்டுமே மானியம் வழங்கப்படுவதாகவும், இது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு எனவும் இந்திய மத்திய வர்த்தகத் துறை செயலாளரான அனுப் வதவான் விளக்கமளித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் வழங்கப்படும் மானிய உதவிகள் மிகப் பெரியது எனவும் விவசாயத் துறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏராளமான மானியத் தொகையை வழங்குகின்ற போதும் அவை உலக வர்த்தக மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதாக மூடி மறைக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.