189
ஜீவா நடிப்பில் கீ திரைப்படம் எதிர்வரும் வாரம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அவர் வழங்கியுள்ள நேர்காணலில் தான் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக ஜீவா தெரிவித்துள்ளார்.
ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என மூன்று திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. அத்துடன் மேலும் மூன்று திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.
ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு நேர்ணாலில் ’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Spread the love