163
உங்களிடம் ஈகோவே கிடையாதா? என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ உள்ளது என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ இன்று வெளியாகி உள்ளது. படத்தை சிறப்பு காட்சிகளில் பார்த்தவர்கள் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நினைவு வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்று உங்களைப் பற்றி கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. ஆனால், அதை அடையாளம் கண்டு கொள்கிறேன். உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. அதுதான் உங்களை வளர்த்து உயரத்துக் கொண்டு செல்கிறது. ஆனால், ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது ‘சங்கத் தமிழன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்குகின்றார்.
Spread the love