348
நுண்கடன் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாத நிலையில், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதிக உறக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த, நாகராசா பரமேஸ்வரி என்ற 45 வயதுடைய பெண் நுண்நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இம் மாதம் 5ஆம் திகதி அதிக உறக்க மாத்திரைகளை உட்கொண்டமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். உறக்க மாத்திரைகளை உட்கொண்டமை காரணமாக அவரது உடல் நிலமை மோசமடைந்துள்ளது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர், விடு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்மணி நேற்று முந்தினம் உயிரிழந்துள்ளார். . குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் நேற்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
Spread the love