திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினரும் வருமான வரித்துறையினரும் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நிலையில் நேற்று இரவு துரைமுருகனின் வீட்டுக்கு சென்ற வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை 3 மணிக்கு வரை வலுக்கட்டாயமாக சோதனையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துரைமுருகனின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளருமான தேவராஜ் என்பவரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது