ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர் கிறிஸ் கெயில் 300 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நேற்றையதினம் மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டியிட்ட நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து, 177 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கிய நிலையில் அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ஓட்டத்துடன் ஆட்மிழந்திருந்தார்.
கிறிஸ் கெயில் அடித்த 4 சிக்சர்களுடன் அவர் ஐபிஎல் போட்டிகளில் 302 சிக்சர்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயில் பெற்றுள்ளார். 115 போட்டிகளில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் 192 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், 185 சிக்சர்களுடன் எம்.எஸ்.டோனி மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.