குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளின் பகுதி ஒன்றுக்கான பணிகளின் முன்னாய்த்தப் வேலைகள் இன்று(01-04-2019) இடம்பெற்றன.
இன்றையதினம் (01) கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வருகைதந்த நெதர்லாந்து மற்றும் ஆஸ்த்திரிய நாட்டின் கட்டடப் பொறியியலாளர்கள் மற்றும் வரைகலை நிபுணர் குழுவினர் அந்த நாடுகளின் உதவியுடன் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வைத்தியசாலையின் கட்டம் 02, பகுதி 01 ற்கான ( Stage 2, Phase 1) இறுதிக்கட்ட நில அளவை மற்றும் எல்லையிடும் பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன்மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கிளிநொச்சி வைத்தியாலையில் வடமாகாணத்திற்கான விசேட பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்றியல் மையம் இயங்கத்தொடங்குவதுடன் சீரீ ஸ்கான் வசதியுடனான அவசர விபத்துச் சேவைப்பிரிவும் தனது சேவையினை வழங்கக்கூடியதாக இருக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 1974 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆடி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.