149
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமுமின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது நாளை இடம்பெறவுள்ள வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன நாளை காலை தனித்தனியாக கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love