Home பிரதான செய்திகள்12 மணி நேரத்திற்குள் இரு நாடுகளில் இரண்டு போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய மலிங்கா

12 மணி நேரத்திற்குள் இரு நாடுகளில் இரண்டு போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய மலிங்கா

by admin

நேற்றையதினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, நள்ளிரவு இலங்கை சென்று அங்கு உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் அதேசமயம் இலங்கையில் இன்று தொடங்கி எதிர்வரும் 11ம் திகதிவரை நடைபெறுகின்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாட்டி வருகின்றார்

உள்ளூர் தொடரில் விளையாடினால்தான் உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இடம் பெறலாம் என தெரிவித்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை ஐபிஎல் தொடரில் விளையாடவும் அனுமதி அளித்தது.

இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா நேற்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

போட்டி முடிய நள்ளிரவு 12 மணி ஆகிய நிலையில் போட்டி முடிந்த உடனே மும்பையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் சென்ற அவர் அங்கிருந்து கண்டிக்கு சென்று அங்கு இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காலி அணியின் தலைவராக களம் இறங்கி விளையாடி 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

அந்தவகையில் 12 மணி நேரத்திற்குள் இரண்டு அணிகளுக்காக விளையாடி 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More