டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுத் தலைவரான மாக்கந்துர மதுஷ் எதிர்வரும் 19 அல்லது 20ம் திகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்தும் டுபாயில் தங்கியிருக்க அனுமதி கோரி அந்நாட்டு நீதிமன்றில அவர் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் பெரும்பாலும் அவருக்கு டுபாயில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்ட மாட்டாதென அங்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன்னவிடம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மாக்கந்துர மதுஷை நாடு கடத்தும் போது டுபாயின் விசேட காவல்துறைக்குழுவொன்று அவரை அழைத்து வந்து இலங்கை விமான நிலையத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.