கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரி சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இரண்டு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்று 07-04-2019 கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறாவளர் மண்டபத்தில் இடம்பெற்றது.
செயலாளரின் கூட்ட அறிக்கை, பொருளாளரின் கணக்கறிக்கை போன்ற வழமையான நிகழ்ச்சி நிரல்களை தொடர்ந்து நோயாளர் நலன்புரி சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் காண்டீபன் மருத்துவர்கள் குகராசா, மனோகரன், சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
பதவி நிலைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்புக்கு செல்லும் நிலை ஏற்பட்டது இதன் போது ஒரு தரப்பு பகிரங்க வாக்கெடுப்புக்கும் இன்னொரு தரப்பு இரகசிய வாக்கெடுப்புக்கும் கோரிய நிலையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு சமரசம் ஏற்படாத நிலையில் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரால் புதிய தெரிவு இரத்து செய்யப்பட்டது. புதிய நிர்வாகத் தெரிவில் இதுவரை காலமும் நிர்வாகத்தில் பதவிகளில் காணப்பட்ட தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் மீண்டும் பதவிக்கு முன்மொழியப்பட்டதனால் சபையில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
இது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் காண்டீபன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர் நலன்புரி சங்கம் என்ற ஒரு அமைப்பு இல்லை இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் புதிய நிர்வாகத் தெரிவு இரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு தரப்பினர்களும் தங்களுக்குள் பேசி ஒரு தீர்மானத்திற்கு வந்து சந்தித்தால் பிரிதொரு திகதியில் மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறும்