132
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான படிவம் வழங்கப்படுகின்ற நிலையில் அதனை வைத்து அவர்கள் தங்கள் வாக்கைச் செலுத்தலாம்.
சென்னையில் மட்டும் சுமார் 24,000 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நேற்று ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love