193
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிணற்றில் தவறி விழுந்த யுவதி சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று கைதடி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதடி குமரநகரை சேர்ந்த கணேசன் ஜெசிக்கா (வயது 18) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி நேற்றைய தினம் கிணற்றடிக்கு முகம் கழுவதற்காக சென்ற போதே கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அதனை அவதானித்த வீட்டார் யுவதியை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love