169
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வெளிநாட்டில் இருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவன் நேற்றைய தினம் வீட்டில் இருந்த போது தாகமாக இருக்கின்றது என சோடா போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த மண்ணெண்ணெயை சோடா என கருதி குடித்துள்ளார்.
அதனை அடுத்து சிறுவனை வீட்டார் சாவகச்சேரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்
Spread the love