தனிப்பட்ட காரணமாக அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ இன்று காலை இலங்கை திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் அவருக்கெதிராக இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இன்று இவ்வாறு நாடு திரும்புயள்ளார்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்ஸவிடம் அவருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்த ஆவணங்களை பிரீமியர் குரூப் இன்டர்நசனல் எனும் தனியார் நிறுவனத்தினர் கையளித்துள்ளமை தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
கோத்தபாய ராஜபக்ஸ கலிபோர்னியாவில் உள்ள டிரேடர்ஸ் ஜோ வணிகவளாகத்திற்கு சென்றுவிட்டு வெளியே வந்தவேளை அவரிடம் குறித்த வழக்கின் பிரதிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தமை தொடர்பில் அவருக்கெதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.