நல்லூர் பிரதேச சபை வட்டார அடிப்படையிலான தேவை மதிப்பீடும், மக்கள் கலந்துரையாடலும் வட்டார ரீதியாக நடைபெறவுள்ளது.
பிரதேச சபை வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் , திட்ட வரைபுகள், தேவைபாடுகள் , குறித்து , வட்டார ரீதியாக மக்களின் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
எதிர்வரும்(நாளை ) 18ஆம் திகதி 2ஆம் வட்டார (J/118, J/119) மக்கள் கலந்துரையாடல் மற்றும் 20 ஆம் திகதி 3ஆம் வட்டார (J/116, J/120) மக்கள் கலந்துரையாடல் ஆகியவை கோண்டாவில் ஆசிமட அரசடி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 20ஆம் திகதி 4ஆம் வட்டார (J/124 , J/128) கலந்துரையாடல் கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலையில் காலை 9 மணிக்கும் 21ஆம் திகதி 6ஆம் வட்டார (J/121, J/123) கலந்துரையாடல் கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தில் காலை 09 மணிக்கும் , தொடர்ந்து 8ஆம் வட்டார (J/114) கலந்துரையாடல் முத்துதம்பி மகாவித்தியாலயத்தில் காலை 10.30 மணிக்கும் அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு 7ஆம் வட்டார (J/122 J/126) கலந்துரையாடல் கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் நடைபெறும்.
எதிர்வரும் 22ஆம் திகதி விவேகானந்தா சனசமூக நிலையத்தில் (மஞ்சத்தடி) 1ஆம் வட்டார (J/115, J/117) மக்களுக்கான கலந்துரையாடலும் , கல்வியங்காடு செங்குந்தா இந்துக்கல்லூரியில் 10ஆம் வட்டாரத்திற்கான (J/112, J/113) கலந்துரையாடலும், அரியாலை நாவலடி சிகிச்சை நிலையத்தில் 12ஆம் வட்டாரத்திற்கான (J/89, J/90) கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. அதேவேளை அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலி பரமேஸ்வர கல்லூரியில் 09ஆம் வட்டார (J/110, J/111) கலந்துரையாடலும் நடைபெறும்.
எதிர்வரும் 23ஆம் திகதி கொக்குவில் பிடாரி அம்மன் ஆலய மண்டபத்தில் 5ஆம் வட்டார (J/99, J/125, J/127) கலந்துரையாடலும் , அரியாலை முள்ளி யூதா கோயிலில் 11ஆம் வட்டாரத்திற்கு (J/94 , J/96) உரிய கலந்துரையாடலும் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.