டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம், தலையீடு குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என ஜனாதிபதி டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.