126
நல்லூர் பிரதேச சபை வட்டார அடிப்படையிலான தேவை மதிப்பீடும் , மக்கள் கலந்துரையாடலும் வட்டார ரீதியாக நடைபெற்று வந்த மக்கள் கலந்துரையாடல் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையால் பிற்போடப்பட்டு உள்ளதாக தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்தார். பிரதேச சபை வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், திட்ட வரைபுகள், தேவைபாடுகள், குறித்து, வட்டார ரீதியாக மக்களின் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல்கள் நடத்தபட்டு வந்தன. அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மற்றும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற விருந்த கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டு உள்ளன.
இன்றைய தினம் 22ஆம் திகதி விவேகானந்தா சனசமூக நிலையத்தில் (மஞ்சத்தடி) 1ஆம் வட்டார (J/115, J/117) மக்களுக்கான கலந்துரையாடலும் , கல்வியங்காடு செங்குந்தா இந்துக்கல்லூரியில் 10ஆம் வட்டாரத்திற்கான (J/112, J/113) கலந்துரையாடலும், அரியாலை நாவலடி சிகிச்சை நிலையத்தில் 12ஆம் வட்டாரத்திற்கான (J/89, J/90) கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. அதேவேளை மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலி பரமேஸ்வர கல்லூரியில் 09ஆம் வட்டார (J/110, J/111) கலந்துரையாடலும் நடைபெறவிருந்தன.
நாளைய தினம் 23ஆம் திகதி கொக்குவில் பிடாரி அம்மன் ஆலய மண்டபத்தில் 5ஆம் வட்டார (J/99, J/125, J/127) கலந்துரையாடலும் , அரியாலை முள்ளி யூதா கோயிலில் 11ஆம் வட்டாரத்திற்கு (J/94 , J/96) உரிய கலந்துரையாடலும் மாலை 3.30 மணிக்கு நடைபெறவிருந்தன. குறித்த இரு கலந்துரையாடல்களும் பிர்போடபட்டுள்ளதாகவும் , கலந்துரையாடல் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்
Spread the love