Home இலங்கைகட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மீட்கப்பட்ட குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

by admin

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விமான நிலையத்திற்கு காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விமானப்படையின் நடமாடும் சோதனைப் பிரிவு நேற்று இரவு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது இந்தக் குழாய்க் குண்டு மீட்கப்பட்டதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் கிஹான் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த குழாய்க் குண்டினை விமானப்படையினர் செயலிழக்கச் செய்துள்ள நிலையில் தொடர்ந்தும் விமான நிலையத்துக்கு குண்டு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனையடுத்து விமானப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்ப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More