உக்ரைன் நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக வாக்குப்பதிவுக்கு பின்னைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
அரசியலுக்கு புதியவரான 41 வயதான ஜெல்லன்ஸ்கி, மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு வாக்குகளை பெற்றிருந்தார்.
இந்தநிலையில் ஜெல்லன்ஸ்கியிடம் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்வதாக அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்துள்ளார்.
தான் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாகவில்லை என்ற போதிலும் உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்
உக்ரைனை பொறுத்தவரை பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது என்கின்ற நிலையில் கருத்துக் கணிப்புகள் சரியாக இருக்கும்பட்சத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உக்ரைனின் ஜனாதிபதியாக ஜெல்லன்ஸ்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. .
உக்ரைனின் தொலைக்காட்சி நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்த ஜெல்லன்ஸ்கி, திடீரென அந்நாட்டின் ஜனாதிபதியாவது போன்ற காட்சிகள் இருந்த நிலையில் அது தற்போது உண்மையாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது