பிலிப்பைன்ஸின் லுசோன் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளு}ர் நேரப்படி நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியிலுள்ள விமான நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, குறைந்தது இரண்டு கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பம்பாங்கா மாகாணத்தில் சேதமடைந்துள்ள கட்டடத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் குறித்த மாகாணம் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக, அம்மாகாண ஆளுநர் லிலியா பினேடா தெரிவித்துள்ளார்.