ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதியளித்ததற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தின் ஒருகட்டமாக இதுவரை நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் இரு திட்டங்களுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு திட்டத்துக்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தின்படி மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 27 இடங்களில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி கடந்த 14ஆம் திகதி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 40 இடங்களில் ஆய்வு செய்ய இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பல்வேறு தலைவர்களும்; கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது