153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை முழுவது பெரும் சோகத்தையும் , அச்சத்தையும் ஏற்படுத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிர் இழந்த அனைத்து உறவுகளுக்கும் மன்னாரில் இன்று மாலை (23) இளைஞர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
குண்டு வெடிப்பில் உயிர் இழந்த அனைவரின் ஆத்மாக்களும் சாந்தி அடைய வேண்டும் என்ற அடிப்படையிலும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாகவும் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டதுடன் சுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love