File Photo
யாழ்.பருத்தித்துறை பகுதியில் வாழும் இஸ்லாமியர்களின் விபரங்களை காவற்துறை விசேட அதிரடி படையினர் பெற்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களின் விபரங்களை சேகரிக்கும் நோக்குடன் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் விபரங்களை காவற்துறை விசேட அதிரடி படையினர் கேட்ட போது, ஒரு ஒரு குடும்பம் மாத்திரமே பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டு தங்கியுள்ளனர். என்பதனை கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து பருத்தித்துறை பள்ளிவாசலுக்கு சென்ற காவற்துறை விசேட அதிரடி படையினர் அங்கிருந்த மௌலவியிடம் அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் விபரங்களை கேட்டிருந்தனர். அதனடிப்படையில் இன்றைய தினம் புதன் கிழமை மௌலவி விபரங்களை கையளித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல இஸ்லாமியர்கள் தங்கி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.