155
நாடு பூராகவும் மீண்டும் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து மீண்டும் மின்சாரத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே இருப்பதனாலேயே மின்சாரத்தடை ஏற்படுத்தப்படவுள்ளது என தெரியவந்துள்ளது.அதன்படி குறித்த மின்வெட்டு திட்டமிடப்பட்ட கோரிக்கை முகாமைத்துவத்தின்படி அமுல்படுத்தப்படவுள்ளது.
#srilanka #powercut
Spread the love