Home இலங்கைவழமைக்குத் திரும்பியது கட்டுநாயக்க வீதி

வழமைக்குத் திரும்பியது கட்டுநாயக்க வீதி

by admin

கட்டுநாயக்க வீதியானது தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து காவல்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதல்களையடுத்து வாகன சோதனை நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்தது.

பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தினுடைய வெளிப்புற வாகனத் தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் ஏற்பட்ட பதற்ற நிலையினையடுத்து முப்படையினர் மற்றும் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த வாகன சோதனை நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் விமான நிலையத்தின் நடவடிக்கைகளும் போக்குவரத்து நடவடிக்கைகளும் இயல்பு நிலைக்கு திரும்புயள்ளன.

எனினும் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு செல்கின்ற வாகனங்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்டதொரு சோதனையின் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#Katunayake #airport # checking

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More