149
`டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ முதலிய திரைப்படங்களை இயக்கியவர், சாம் ஆன்டன். தற்போது யோகி பாபுவை வைத்து ‘கூர்கா’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் யோகி பாபு `கூர்கா’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கனடாவைச் சேர்ந்த எலிஸா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
ஆன்ந்த் ராஜ், லிவிங்ஸ்டன் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இணையத்தில் நடிகர் தனுஷ் முன்னோட்டத்தை வெளியிட்டார். இதற்கு முன்னதாக படத்தின் முதல் சுவரொட்டியை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
படம் குறித்துப் பேசிய இயக்குநர் சாம் ஆண்டன்,“ஜாலியா ஒரு படம் பண்றதுதான் ஐடியா. இந்தப் படத்துல லீடு ரோல்னு யாரும் கிடையாது. படத்துல ஒரு நாய்க்கு முக்கியமான ரோல். கனடா மாடல் அழகி, சார்லி சார், மயில்சாமி அண்ணா, ஆனந்த் ராஜ் சார், மனோபாலா சார், தேவதர்ஷினி மேடம், ரவி மரியா, ராஜ் பரத்… இப்படிப் பெரிய பட்டாளமே இருக்கு. ஒரு மால்ல பலபேர் பணயக் கைதிகளா மாட்டிக்கிற சூழல்ல, இத்தனை காமெடி நடிகர்கள் இருந்தா எப்படி இருக்கும்… அதுதான் படத்தின் களம்” என்று கூறியுள்ளார்.
#Yohibabu #commedy #gurkha
Spread the love