இலங்கை பிரதான செய்திகள்

மட்டு தற்கொலை குண்டுதாரி ரில்வானின் தாய், காத்தானகுடியில் கைது..


மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அவரின் தாய் தனது மகன் ரில்வானை அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை இன்று இரவு கைது செய்துள்ளதாகவும் காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்றுள்ள குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த விசாரணையில் குறித்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக றில்வானின் உறவினர்களால் இவர் றில்வான் தான் என அடையாளம் காணப்படாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று (25.04.19) வியாழக்கிழமை இரவு புதிய காத்தான்குடி 4 ஆம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை சி.ஐ.டி யினர் முற்றுகையிட்டு அவரிடம் தற்கொலை குண்டு தாரியின் புகைப்படத்தை காட்டியபோது அவருவடய மகன் என அடையாளம் காட்டியுள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த குண்டுதாரி கல்முனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெமட்டகொடையில் வசித்துவந்துள்ளதாகவும் சி.ஐ.டி யினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி யினர் மேற்கொண்டு வருகின்றனர். #batticaloa #eastersundayattacklk #arrest #suicideattack #suicide bomber

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.