தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாதுஉயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது. இன்று (25.04.90) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா இவ்வாறு தெரிவித்துள்ளது. தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதல் எந்தவொரு தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் தீவிரவாத செயலுக்கு உதவி வழங்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிருஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தினர் அவர்களின் மத வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும், அதற்கான பாதுகாப்பை அகில இலங்கை ஜமியத்துல் உலமா வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு கிருஸ்தவ தேவாலயங்களில் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாவிடன் முஸ்லிம்களின் மசூதியில் அல்லது கிருஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள வழியமைத்து தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முஸ்லிம்கள் என்ற வகையில் பொறுப்புவாய்ந்த இலங்கை பிரஜைகளாக தாய் நாட்டை பாதுகாக்கவும் நாட்டில் சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமைபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போதுள்ள நிலமையில் பெண்கள் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என அகில இலங்கை ஜமியத்துல் உலமா முஸ்லிம் பெண்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. #eastersundayattacklk #all ceylonjamiyyathululama