அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்த முதல் உச்சிமாநாட்டில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறையை விமர்சித்துள்ள புட்டின் அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நம்பிக்கையும் மரியாதையையுமே தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விளாடிமிர் புட்டினுடன் நடைபெற்ற உச்சிமாநாட்டை மிகவும் அர்த்தமுள்ளதொரு சந்திப்பு என கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நடைபெற்ற உச்சிமாநாடு தோல்வி அடைந்த நிலையில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்குமடைமயே இந்த உச்சிமாநாடு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#russia #northkorea #leaders #viladimputin