நீண்ட காலம் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் மருத்துவ செலவுகளுக்கு செலவான இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்காவிடம், வட கொரியா கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2015ஆம் ஆண்டு சுற்றுலாவிற்காக சென்ற வார்ம்பியர், வட கொரியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 17 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு கோமா நிலையில் அமெரிக்கா திரும்பிய அவர் அங்கு உயிரிழந்தார். .
வார்ம்பியரை அவரது நாட்டிற்கு அனுப்பும் முன்னரே அவரின் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என வட கொரியா கேட்டிருந்தது
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#north korea #america #student #OttoWarmbier